Wednesday, August 15, 2018

தேவல மகரிஷி ஓர் ஆய்வு


நாம் எண்ணுவது போல தேவல மகரிஷி என்ற பெயர் கொண்டவர் ஒரே ஒருவர் மட்டும் அல்ல. எனக்கு தெரிந்து மூன்று தேவல மகரிஷி  வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.


முதலாம் தேவல மகரிஷி : நெசவின் தந்தை 

1. நம் ஆதி தேவல முனிவர் 40 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதாரம் எடுத்தவர் இவர் சிவ பெருமானால் அவரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், இவரே முதல் முதலில் ஆடையை நெய்தவர்,  இவரையை நாம் நம் தேவாங்க புராணத்தில் குறிப்பிடுகிரோம்.

இரண்டாம் தேவல மகரிஷி : மஹாபாரத காலத்தில் வாழ்ந்தவர் 


2. தேவல ரிஷி என்பவர் வ்யாசரின் சீடர்களிலொருவர். அனித முனியின் மகன். இவர் பாண்டவர்களின்  குடும்ப புரோகிதராக இருந்தவர். இவரே தௌம்ய முனிவரின் அண்ணன்.    கஜேந்திர மோக்ஷத்தில் இடம் பெரும் கந்தர்வனுக்கு முதலையாய் கடவாய் என சாபம் அளித்துவரும் இவரே. மஹாபாரத கதை நடந்தது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.

மூன்றாம் தேவல மகரிஷி :  தேவல ஸ்ரீமிதி எழுதியவர் 

3. இவர் 7 ஆவது அல்லது  8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 712 ஆம் ஆண்டு முகம்மது பின் காசிம் படையெடுப்பின் போது சிந்து இந்துக்கள் மிகவும் கொடுமை படுத்த பட்டு கட்டாயமாக  இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டனர். சமய புரட்சியாளரான தேவல மகரிஷி கட்டாயமாக மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதம் திருப்பும் முயற்சில் இறங்கினர். தாய் மதம் திருப்புவதற்கான சடங்கை (சுத்திகரிப்பு  : ஒன்றாம் நாள் முதல் இருவது ஆண்டுகளுக்கான சடங்கு ) பற்றிய தெளிவான விளக்த்தை எழுதுயுள்ளார்.

A. சங்கராச்சாரியார் தேவல மகரிஷி பற்றியும் தேவல ஸ்ரீமிதி பற்றியும் பிரம்ம சூத்ரா என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  
B. தேவல ஸ்ரீமிதி நூலை புதுப்பித்து அச்சடித்தவர் பிரோபஷர் M.L வடிகர்   ( இரண்டு தொகுதிகள், டெல்லி : கோஷல் புக் டிப்போ 1997)

C. RSS (ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம்) நித்தியம் சமரணம் செய்யும் ஏக் ஆத்மதா ஸ்தோத்திரத்தின் 17 ஆவது வரியிலுள்ள  ( தேவலோ ரவிதாஸச்ச கபிரோ குரு நானாக) தேவல என்பவரும் இவரே. 






உங்கள் : செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி, MCA, PGDBA, CCNA, CCNP, ITIL, ISO IEC / 20000


No comments:

Post a Comment

Youtube Videos List

"Video: Devanga The Truth Unfold"

"Video: ದೇವಾಂಗ ಇಲ್ಲಿಯವರೆಗೆ ತಿಳಿದಿಲ್ಲದಂತಹ ಸತ್ಯಗಳು"

"Video: தேவாங்க (இதுவரை அறியப்படாத உண்மைகள்)"

Sponser:

Sponser: